பயிற்சி இடம்பெறும் இடங்கள்
மேற்பார்வை அங்கத்தவர்கள் என்ற முறையில் பட்டயக் கணக்காளர்கள் இருந்து வரும் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் CA – Sri Lanka அங்கீகரிக்கப்பட்டிருக்கும் நிறுவன ங்களில் பயிற்சி இடம்பெறும்.
பயிற்சித் துறைகள்
பயிற்சித் துறைகள் பின்வருவனவற்றையும் உள்ளடக்குகின்றன: நிதிக் கணக்கீடு மற்றும் முகாமைத்துவ கணக்கீடு, கணக்காய்வு மற்றும் உறுதிப்படுத்தல், வரி, நிதி முகாமைத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் பாவனை.
விதித்துரைக்கப்பட்டிருக்கும் பயிற்சிக் காலம் - ஒரு வருடம் (அங்கத்துவத்தை பெற்றுக் கொள்வதற்கு)
ஆகக்குறைந்த செய்முறை பயிற்சி காலம் ஆண்டொன்றுக்கு 220 வேலை நாட்கள் ஆகும். ஒரு வேலை நாள் என்பது ஆகக்குறைந்தது 7 மற்றும் ஆகக்கூடியது 8 வேலை மணித்தியாலங்களைக் கொண்ட ஒரு நாளாக இருந்து வரும். அரை நாள் விகிதாசார அடிப்படையில் கவனத்தில் கொள்ளப்படும். பகுதிநேர வேலைகளின் அடிப்படையில் சேகரிக்கப்பட்டிருக்கும் வேலை நேரங்கள் ஒரு வேலை நாளுக்கு சமமானதாக கருதப்பட மாட்டாது. பயிலுநனர்கள் தமது செய்முறை பயிற்சி ஒப்பந்தத்தை AAT இலங்கை இன் ஒப்புதலுக்கு அமைவாக ஆகக்கூடியது 3 மாத காலத்திற்கு பின்திகதியிட முடியும்.
விதித்துரைக்கப்பட்டிருக்கும் பயிற்சிக் காலம் - இரண்டு வருடங்கள் (இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் பரீட்சைகளுக்கு விலக்களிப்புக்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு)
இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் செய்முறை பயிற்சித் தேவைகளிலிருந்து ஒரு வருட கால விலக்களிப்பை பெற்றுக்கொள்ளும் பொருட்டு, மாணவர்கள் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் ஒரு நிறுவனத்தில் இரண்டு (02) வருட கால செய்முறை பயிற்சியை பெற்றுக்கொள்வதும் அவசியமாகும்.
எவ்வாறிருப்பினும், ஒரு வருட கால பயிற்சியை பூர்த்தி செய்த பின்னர் AAT இலங்கை கழகத்தின் அங்கத்துவத்திற்கு விண்ணப்பம் செய்ய முடியும்.
பயிற்சி தொடர்பான பதிவுகள்
பயிற்சி தொடர்பான பதிவுகளை ஆரம்பிக்கும் பொருட்டு மாணவர்கள் AAT இலங்கையுடனும், சம்பந்தப்பட்ட பயிற்சி நிறுவனத்துடனும் ஓர் ஒப்பந்தத்தை செய்து கொள்வது அவசியமாகும்.
மேற்பார்வை செய்யும் அங்கத்தவர்
மேற்பார்வை செய்யும் அங்கத்தவர் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் (CA - Sri Lanka) ஓர் அங்கத்தவராக இருந்து வருதல் வேண்டும்.