நான் எனது வாழ்க்கை பாதையில் பெற்றுக்கொண்ட முதலாவது தொழில்சார் தகைமை AAT ஆகும். AAT காரணமாக கம்பனித்துறை ஆளுகை தொடக்கம் வழங்கல் சங்கிலி முகாமைத்துவம் மற்றும் உபாய ரீதியான திறன்கள் போன்ற பல்வேறு தலைப்புக்களிலும் நான் பெருமளவுக்கு தகவல்களையும், அறிவையும் திரட்டிக்கொண்டேன். இது என்னுடைய எண்ணக்கரு சார் திறன்களின் மீது பெருமளவுக்கு சாதகமான ஒரு தாக்கத்தை எடுத்து வந்தது. நம்பிக்கையுடன் கூடிய விதத்தில் எனது தொழில் ஏணியின் மேலே ஏறிச் செல்வதற்கு இதுவே எனக்கு உதவியது. அது தவிர பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றுக்கு ஊடாக எனக்குள் போஷித்து வளர்க்கப்பட்ட ஆட்களுக்கு இடையிலான தொடர்புத் திறன்கள் மற்றும் மக்கள் தொடர்பு திறன்கள் என்பன இன்று நான் இருக்கும் தொழில்வாண்மை நிலையை எட்டுவதற்கு எனக்கு உதவின. வருடாந்த அங்கத்தவர் மாநாடுகளை ஏற்பாடு செய்வதில் AAT நிறுவனத்தாலும், அதன் அங்கத்தவர்களாலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நான் இங்கு முக்கியமாக குறிப்பிடுதல் வேண்டும். ‘In search' என்ற சஞ்சிகை வெளியிடப்பட்டதுடன், அது அங்கத்தவர்களாகிய எமக்கு புதிய மாற்றங்கள் தொடர்பாகவும், ஏனைய சம்பந்தப்பட்ட தலைப்புக்கள் தொடர்பாகவும் அறிவினை பெற்றுக்கொள்வதற்கு ஒரு தலைசிறந்த மூலமாக இருந்து வந்தது. உள்நாட்டிலும் சர்வதேச தளத்திலும் அந்தப் பிரசுரம் வியப்புடன் நோக்கப்பட்டு வந்தது, இவை அனைத்தும் என்னுடைய தொழிலை வினைத்திறன் மிக்க விதத்திலும், செயல்திறன் மிக்க விதத்திலும் முன்னெடுத்துச் செல்வதற்கு எனக்கு பெருமளவுக்கு பயனுள்ளவையாக இருந்து வந்துள்ளன.
திரு. டபிள்யு.ஏ.எஸ்.பி.எம்.ரி. ஜான்ஸ்
சிரேஷ்ட கணக்காளர்
மாகா (MAGA) பொறியியலாளர் (தனியார்) நிறுவனம்