சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சித் துறையின் தொழில்நுட்ப - முகாமைத்துவ ஆற்றல்களை உயர்த்துதல்
நிருவாக திறன் அபிவிருத்திக்கான தலைசிறந்த ஒரு மையமாக இருந்து வருதல்
AAT வணிகப் பள்ளி இலங்கை கணக்கீட்டு தொழில்நுட்பவியாளர்கள் கழகத்தின் கீழ் இயங்கிவரும் ஓர் தந்திரோபாய வணிக அலகாகும் (Strategic Business Unit). சுய அபிவிருத்தியை தனிநபர் வளர்ச்சியை விரும்புபவர்களின் ஆற்றல்களை மேலுயர்த்துவதற்கும், அவர்களை அங்கீகரிப்பதற்குமென அது தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.
தொழில்நுட்பங்களில் ஏற்பட்டு வந்த அதிவேக மாற்றங்கள் மற்றும் கம்பனித்துறை உலகின் மீது அது எடுத்து வந்த தாக்கம் என்பவற்றுக்கு முகம்கொடுக்கும் வகையில் 1994 ஆம் ஆண்டில் AAT இலங்கை கழகத்தினால் தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பல நிகழ்ச்சித்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கடந்த வருடங்கள் முழுவதும் நாங்கள் எமது செயற்பாடுகளை மேலும் பன்முகப்படுத்தியதுடன், மைக்ரோசொப்ட் பிரயோகங்கள் மற்றும் கணினிமயப்படுத்தப்பட்ட கணக்கியல் தொகுதிகள் என்பவற்றைக் கொண்ட கற்கை நெறிகளை மாணவர்களுக்கு வழங்கினோம். அதேபோல வரி மற்றும் தொழில்சார் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் என்பன தொடர்பான கற்கை நெறியை மேலதிகமாக அறிமுகம் செய்து வைத்தோம்.
21ஆம் நூற்றாண்டுக்குள் பயணிக்கும் பொழுது தொழில்சார் நிபுணத்துவத்தை மேலுயர்த்துவதற்கென தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் ஓர் அமைப்பை ஸ்தாபிக்க வேண்டிய தேவையும், AAT தகைமைகளை பெற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்ற வழிகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டிய தேவையும் இனங்காணப்பட்டிருந்தது. 2012 யூலை மாதம் நடத்தப்பட்ட AAT இலங்கை கழகத்தின் உபாய ரீதியான திட்டமிடல் அமர்வின் போது இது இனங்காணப்பட்டிருந்தது. இதன் விளைவாக 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி சர்வதேச கணக்காளர்கள் சம்மேளத்தின் ((IFAC)) தலைவர் (2012-2014) திரு. வரன் அலன் அவர்களினால் உத்தியோக பூர்வமாக AAT வணிகப் பள்ளி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. தற்பொழுது 5,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் எமது கதவுகளை கடந்து சென்றிருப்பதுடன், தமது தொழில்வாண்மைத் திறன்களை மேலும் மெருகேற்றிக் கொள்வதற்கான ஒரு பயணத்தில் அவர்கள் ஈடுபட்டிருக்கின்றார்கள்.
ஒரு வணிகப் பாடசாலையின் மூலம் அதன் தொழில்நுட்பவியாளர்களை வளர்த்தெடுத்து, அவர்களுக்கு உயர் கல்வியை வழங்குவதற்கு AAT இலங்கை கழகம் எடுத்திருக்கும் முயற்சி ஒரு தனித்துவமான அனுபவம் என சர்வதேச கணக்காளர் நிறுவனத்தின் தலைவர் திரு. வரன் அலன் குறிப்பிட்டார். AAT இலங்கை வணிகப் பள்ளியின் அபிவிருத்தியை தான் மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், இந்த எண்ணக்கரு வெற்றியளிக்கும் சந்தர்ப்பத்தில் AAT UK, அவுஸ்திரேலியா மற்றும் ஹொங்கொங் ஆகிய அமைப்புக்கள் இதனை பின்பற்ற முடியும் என்றும் குறிப்பிட்டார்.
இன்று AAT வணிகப் பள்ளி இலங்கை கணக்கீட்டு தொழில்நுட்பவியாளர்கள் கழகத்தின் கீழ் இயங்கி வரும் ஓர் மூலோபாய ரீதியான வணிக அலகாக இருந்து வருவதுடன், AAT மாணவர்கள், இறுதித் தேர்வில் தேறியிருப்பவர்கள் மற்றும் ஏனைய தொழில்வாண்மையாளர்கள் ஆகியோரின் தொழில் முன்னேற்றப் பாதையை விரிவாக்கும் நோக்கத்துடன் அது செயற்பட்டு வருகின்றது. மேலும், சுய முன்னேற்றத்தை நாடுபவர்களின் திறமைகளை உயர்த்துவதற்கும், அவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவத்றகுமென அது தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, குறிப்பாக முகாமைத்துவம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் போன்ற துறைகளில் திறன்களை வளர்க்கும் நோக்கத்துடன் தனித்துவமான பல நிகழ்ச்சித்திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டு, கடந்த பல வருடங்களின் போது வெற்றிகரமாக பல மைல்களை தாண்டி வந்துள்ளது. தத்தமது துறைகளில் நிபுணத்துவம் கொண்டிருப்பவர்களினால் வடிவமைக்கப்பட்டு, நடத்தப்பட்டு வரும் கற்கை நெறிகள் தற்பொழுது அரசாங்கம், தனியார் துறை மற்றும் ஏனைய கம்பனித்துறை என்பவற்றை சேர்ந்தவர்களை வெகுவாக கவர்ந்தெழுத்து வருகின்றன.
கணக்கீடு மற்றும் நிதி உயர் டிப்ளோமா கற்கை நெறியை துவக்கி தற்போது தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறிகளுக்கான அத்திவாரத்தை இட்டிருப்பதன் மூலம் AAT தகைமையை, நன்மதிப்பு பெற்ற ஒரு பட்டப்படிப்புத் தகைமையாக போஷித்து வளர்ப்பதற்கு நாங்கள் முயன்று வருகின்றோம்.