AAT இலங்கை இன் பரீட்சைகள்
- AAT இலங்கை இன் பரீட்சைகள் ஆண்டுக்கு இரு தடவை ஜனவரி மாதத்திலும், யூலை மாதத்திலும் நடத்தப்படுகின்றன.
- அனைத்து வினாப் பத்திரங்களும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வழங்கப்படும்.
- நாட்டில் 14 பரீட்சை நிலையங்கள் இருந்து வருகின்றன.
தகைமை பெறுதல்
குறிப்பிட்ட வருடம் தொடர்பாக தமது பதிவினை புதுப்பித்துக் கொண்டிருக்கும் மாணவர்களையும் உள்ளடக்கிய விதத்தில் பரீட்சை நடாத்தப்படும் வருடம் தொடர்பாக செல்லுபடியாகக் கூடிய பதிவினைக் கொண்டிருக்கும் AATஇலங்கை கழகத்தின் மாணவர்கள் மட்டுமே இப்பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு தகைமை பெறுகின்றார்கள்.
பரீட்சார்த்தி ஒருவர் மட்டம் 1 மட்டம் 2 என்பவற்றை பூர்த்தி செய்திருந்தால் மட்டுமே 3ம் மட்ட பரீட்சைக்கு தோற்றுவதற்கு அனுமதிக்கப்படுவார்.
பரீட்சைகளுக்கு விண்ணப்பித்தல்
பரீட்சை பிரவேசப் பத்திரங்கள் மற்றும் காசு செலுத்தும் உறுதிச்சீட்டுக்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அனைத்து மட்டங்கள் தொடர்பாகவும் ஒரு பொதுவான படிவம் பயன்படுத்தப்படுகின்றது. சாதாரணமாக செல்லுபடியாகும் பதிவைக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பரீட்சை பிரவேசப் பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். AAT இலங்கை கழகத்திலிருந்து தபால் மூலம் பிரவேச அனுமதிப் பத்திரம் கிடைக்காதிருப்பின், குறிப்பிட்ட மாணவர் AAT இலங்கை - பரீட்சைகள் பிரிவுக்கு வார நாட்களில் முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 5.00 மணிவரை அலுவல் நேரங்களில் வருகை தந்து தமது செல்லுபடியாகும் மாணவர் அடையாள அட்டையை சமர்ப்பிப்பதன் மூலம் பிரவேச அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும். செல்லுபடியாகும் மாணவர் அடையாள அட்டையில்லாமல் அத்தகைய பிரவேச அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படமாட்டாது.
பரீட்சை பிரவேசப் பத்திரங்களை வழங்குதல் மற்றும் விண்ணப்ப முடிவுத் திகதி என்பவற்றுக்கென தொடர்பான பட்டியலிடப்பட்ட திகதிகள்
01,02 பிப்ரவரி 2025 மற்றும் 08,09 பிப்ரவரி 2025 |
10 அக்டோபர் 2024 |
11 நவம்பர் 2024 |
18 நவம்பர் 2024 |
பிரவேசப் பத்திரங்களை அனுப்பி வைத்தல்
பூர்த்தி செய்யப்பட்ட பரீட்சை பிரவேசப் பத்திரங்கள் தேவைப்படும் ஏனைய அனைத்து ஆவணங்களுடனும் இணைந்த விதத்தில் வழங்கப்பட்டிருக்கும் கடித உறையில் பதிவுத் தபாலில் பரீட்சை முடிவுத் திகதிக்கு முன்னர் AAT இலங்கை - பரீட்சைகள் தலைமை அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.
மாணவர் ஒருவர் AAT க்கு நேரடியாக வருகை தருவதாக இருந்தால், அவர்தனது பரீட்சை பிரவேசப் பத்திரம் மற்றும் ஏனைய ஆவணங்கள் என்பவற்றை 9’’ X 5’’ கடித உறை ஒன்றில் இட்டு, அந்நோக்கத்திற்கென AAT நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் போடுதல் வேண்டும். பரீட்சை பிரவேசப் பத்திரத்துடன் இணைந்த விதத்தில் வழக்கமாக AAT இலங்கை நிறுவனத்தினால் கடித உறைகள் வழங்கப்படுகின்றன.
தாமதமான விண்ணப்பங்கள்
பரீட்சை தொடர்பான சாதாரண முடிவுத் திகதியிலிருந்து ஏழு நாட்கள் வரையில் தாமதப்படுத்தப்பட்ட பரீட்சை பிரவேசப் பத்திரங்கள், சாதாரண கட்டணத்துக்கு மேலதிகமாக 50% கொடுப்பனவு ஒன்றை செலுத்துவதற்கு அமைவாக, AAT இலங்கை நிறுவனத்தின் அலுவலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.
பரீட்சை மற்றும் அனுமதி அட்டை தொடர்பான மேலதிக விபரங்களை கீழ்குறிப்பிட்டுள்ள துரித தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்பு கொண்டு பெற முடியும்.
0741504738
0114377007