1.
|
உங்களுடைய பெயருக்கு பின்னால் நீங்கள் உங்களுடைய அங்கத்துவ நிலையை எடுத்துக்காட்டும் பட்டங்களை (MAAT / SAT / FMAAT) பயன்படுத்த முடியும்.
|
2.
|
அங்கத்தவர்களின் போட்டலில் உங்களது விபரம்.
|
3.
|
“பயிற்சி அங்கத்தவர்;” (MIP) ஒருவராக செயற்படுவதற்கான வாய்ப்பு அதற்குரிய தகைமைகளைப் பெற்றிருப்பின் உங்களுக்கு கிடைக்கும்.
|
4.
|
நீங்கள் (தகைமை பெற்ற பின்னர் 10 வருட அனுபவத்தை கொண்டிருக்கும் நிலையில்) உள்நாட்டு இறைவரி நோக்கங்களுக்காக “அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியாக” செயற்பட்டு, “அங்கீகரிக்கப்பட்ட கணக்காளர்” அந்தஸ்தை பெற்றுக் கொள்ள முடியும். (FMAAT உள்ளவர்களுக்கு மட்டும்).
|
5.
|
உங்களுக்கு “Insearch” என்ற அங்கத்தவர் சஞ்சிகை இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.
|
6.
|
நீங்கள் அங்கத்தவர் நாள் நிகழ்ச்சித்திட்டங்கள், வருடாந்த மாநாடுகள், மாதாந்தக் கருத்தரங்குகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றில் பங்கேற்க முடியும். இவை AAT கழகத்தினால் சலுகை கட்டண விகிதங்களில் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
|
7.
|
நீங்கள் AAT கழகத்தின் பல்வேறு கமிட்டிகளில் ஓர் அங்கத்தவராக பணியாற்ற முடியும் (தற்பொழுது சுமார் 9 கமிட்டிகள் இருந்து வருகின்றன).
|
8.
|
எமது பரீட்சை செயற்பாடுகளில் பின்வரும் விதத்தில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கலாம்:
(i) விடைத்தாள்களுக்கு புள்ளிகளை வழங்கும் பரீட்சகர். (ii) பரீட்சை நிலையம் ஒன்றின் மேற்பார்வையாளர். (iii) வினாப் பத்திரங்களை தயாரிப்பவர் / நெறிப்படுத்துபவர் / மொழிபெயர்ப்பவர். |
9.
|
AAT வணிகப் பள்ளியின் HDAF, MDP கணினி, வரி என்பன தொடர்பான கற்கை நெறிகளில் விசேட கட்டண விகிதங்களில் நீங்கள் சேர்ந்துகொள்ள முடியும்.
|
10.
|
ஹோட்டல்கள், உணவகங்கள், உணவுப் பண்டங்களை வழங்கும் நிலையங்கள், புத்தக நிலையங்கள், மூக்குக் கண்ணாடி நிலையங்கள், மருத்துவமனைகள், தளபாடங்கள், நகைகள், சஞ்சிகைகள், சுற்றுலாக்கள், வாகன சுத்திகரிப்பு நிலையங்கள், ஆயத்த ஆடைகள், பாதணிகள் முதலிய வசதிகளை நீங்கள் பிந்திய கழிவு விகிதங்களுடனும், விசேட சேவைகளுடனும் பெற்றுக்கொள்ள முடியும்.
|
11.
|
HNB வங்கியிலிருந்து ஒரு Affinity கடன் அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.
|