AAT இலங்கை நிறுவனத்தின் தொடர்ச்சியான தொழில்வாண்மை அபிவிருத்தித்திட்டம் (CPD) அங்கத்தவர்களின் தொழில்வாண்மைத் திறன்களை உயர்த்தும் நோக்கத்துடனும், நிறுவனம் மற்றும் அதன் அங்கத்தவர்கள் ஆகிய தரப்புக்களுக்கு இடையில் சிறந்த உறவுகளை பராமரித்து வரும் நோக்கத்துடனும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த (CPD) திட்டம் நீண்ட காலத்திற்கு அங்கத்துவத்தை வைத்துக்கொள்ளும் பொருட்டு AAT க்கும் அங்கத்தவர்களுக்கும் இடையில் ஓர் உறவுப் பாலத்தையும் உருவாக்குகின்றது. இத்திட்டம் ஒரு சுய ஒழுங்குமுறைப்படுத்தும் தொடர்ச்சியான தொழில்வாண்மை அபிவிருத்தித் திட்டமாக இருந்து வருவதுடன், அது AAT இனால் கண்காணிக்கப்படும். இத்திட்டத்தின் அமுலாக்கத்துடன் இணைந்த விதத்தில் SAT மற்றும் FMAAT பட்டங்களுக்கு தகைமை பெறுவதற்கென, தகைமை பெற பின்னர் 5 வருட கால சேவைக்கான தேவை இல்லாமல் போய்விடும்.
(CPD) திட்டத்தின் அமுலாக்கத்துடன் இணைந்த விதத்தில் ; CPD Credits களை கருத்தில் கொண்டு, அங்கத்துவ வகைகளை மேலுயர்த்தும் செயற்பாடு பின்வரும் விதத்தில் திருத்தியமைக்கப்பட்டுள்ளது:
SAT வகைக்கு மேலுயர்த்துதல்
MAAT பட்டத்தை பெற்றுக்கொண்ட பின்னர் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அடிப்படைத் துறைகளில் 05 வருட கால நிறைவேற்று மட்டத்திலான அனுபவம் மற்றும் 120 CPD Credits களை ஈட்டிக் கொள்ளல்.
FMAAT வகைக்கு மேலுயர்த்துதல்
SAT பட்டத்தை பெற்றுக்கொண்ட பின்னர் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அடிப்படைத் துறைகளில் 05 வருட கால முகாமைத்துவ மட்ட அனுபவம் மற்றும் 80 CPD Credits களை ஈட்டிக்கொள்ளல்.
ஜனவரி 01 , 2009 ஆம் திகதி தொடக்கம் அமுல் செய்யப்பட்ட CPD திட்டம் ஏப்ரல் 01, 2011 தொடக்கம் அமுலுக்கு வரும் விதத்தில் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.