தேவைப்படும் தகுதிகளின் அடிப்படையில் விலக்களிப்புக்களை பெற்றுக்கொள்வதன் மூலம் பாடங்களை அல்லது AAT பரீட்சை கட்டங்களை பூர்த்தி செய்ய விரும்பும் அனைத்து முனைப்பான AAT மாணவர்களும் AAT பதிவுடன் இணைந்த விதத்தில் அல்லது பதிவினை உடனடுத்து அத்தகைய விலக்களிப்புக்களுக்கென விண்ணப்பம் செய்தல் வேண்டும்..
எவ்வாறிருப்பினும், பதிவு செய்யப்படும் சந்தர்ப்பத்தில் விலக்களிப்புக்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கு தேவையான தகைமைகளை பெற்றுக்கொண்டிராத மாணவர்கள், பின்வரும் முடிவுத் திகதிகளுக்கு அமைவாக, பின்னர் அத்தகைய விலக்களிப்புக்களுக்கு விண்ணப்பம் செய்ய முடியும்:
விலக்களிப்புக்களுக்கான இறுதித் திகதிகள்
முடிவுத் திகதிகளின் பின்னர் வழங்கப்படும் விலக்களிப்புக்களை உள்ளடக்கும் விதத்தில் முழுமையான பெறுபேற்றுப் பத்திரம் வழங்கப்படாதிருப்பதினால், மேலே குறிப்பிடப்பட்ட திகதிகளுக்கு கண்டிப்பான விதத்தில் இணங்கி ஒழுக வேண்டும் என நீங்கள் அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.
மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் கடைசித் திகதிகளுக்கு பின்னர் நீங்கள் விண்ணப்பம் செய்வதாக இருந்தால் உங்கள் விலக்களிப்பு தாமதமடைய முடியும் (தயவு செய்து மேலும் விபரங்களை பெற்றுக்கொள்வதற்காக மாணவர் வழிகாட்டியைப் பார்க்கவும்).
விலக்களிப்புக்கள் வழங்கப்பட்ட பின்னர், எத்தகைய சந்தர்ப்ப சூழ்நிலைகளின் கீழும் அவை இரத்து செய்யப்படமாட்டாது.
AAT பரீட்சையில் ஒரு பாடத்தை பூர்த்தி செய்வது தொடர்பான உங்கள் தெரிவு ஒன்றில் பரீட்சை மூலமாக அல்லது விலக்களிப்பு மூலமாக மட்டுமே இருந்து வருதல் வேண்டும்.
விலக்களிப்பு கட்டண கட்டமைப்பு
விலக்களிப்புக் கட்டணங்கள் (அக்டோபர் 1, 2024 முதல் அமலுக்கு வருகிறது) | ||
---|---|---|
பரீட்சை மட்டம் | விபரம் | கட்டணம்(இல. ரூ) |
கணக்கீட்டு உதவியாளர் (AA1) | ஒரு பாடத்திற்கு | 2,200/= |
கணக்கீட்டு பகுப்பாய்வாளர் (AA2) | ஒரு பாடத்திற்கு | 2,700/= |
கணக்கீட்டு இணைஉறுப்பினர் (AA3) | ஒரு பாடத்திற்கு | 2,900/= |
திறமைச் சோதனை | ஒரு பாடத்திற்கு | 2,700/= |
கட்டண விருப்பங்கள்
விலக்களிப்பை பெற்றுக்கொள்வதற்கு நிறைவேற்றப்பட வேண்டிய தேவைகள்
முக்கியம்: பரீட்சைகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்னர் விலக்களிப்புச் சான்றிதழ் ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும். விலக்களிப்பு விண்ணப்பப்படிவம் மற்றும் பணம் செலுத்தும் உறுதிச்சீட்டு என்பன AAT மாணவர் வழிகாட்டியின் ஒரு பாகமாகும்.
விலக்களிப்புச் சான்றிதழ் காணாமல் போனால் / இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள முடியாது போனால் ரூ. 100/= கொடுப்பனவை செலுத்துவதன் மூலம் சான்றிதழின் ஒரு நகலைப் பெற்றுக்கொள்ள முடியும்.இதற்கென மாணவரால் ஓர் எழுத்து மூலமான வேண்டுகோள் முன்வைக்கப்படுதல் வேண்டும்.புதிய பாடத்திட்டத்தின் கீழ் விலக்களிப்புக்கள் (ஜூலை 2020 தேர்வில் இருந்து நடைமுறைக்கு வருகிறது).
(A)பின்வரும் பாடங்களில் க.பொ.த. உயர்தர (இலங்கை / UK ) பரீட்சையில் சித்தியடைந்திருக்கும் பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் AAT AA1 மட்ட பரீட்சைகளிலிருந்து கீழே காட்டப்பட்டுள்ள பாடங்கள் தொடர்பாக விலக்களிப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கு தகைமை உடையவர்கள் ஆவார்கள்:
G.C.E. (A/L) Subjects | AA1 Exempted Subjects |
---|---|
கணக்கீடு | 101 நிதிக் கணக்கீடு (FAC) |
இணைந்த கணிதம் /தூய கணிதம் /பிரயோக கணிதம் / வணிகப் புள்ளி விபரவியல் | 102 வியாபார கணிதமும் புள்ளி விபரவியலும்(BMS) |
பொருளியல் | 103 பொருளியல் (ECN) |
வணிகக் கற்கைகள் / வர்த்தகம் மற்றும் நிதி | 104 வணிக சூழல் (BEN) |
(B)AAT சர்வதேச கணக்குப் பதிவாளர் கழகத்தின் (IAB)) இறுதித் தேர்வில் தேறியிருப்பவர்கள் AAT யின் 101 நிதிக் கணக்கீடு (FAC) பாடத்திலிருந்து விலக்களிப்பை பெற்றுக்கொள்வார்கள்.
(C)வங்கி மற்றும் நிதி சான்றிதழ் (CBF) / IABF) வங்கியாளர்கள் நிறுவனத்தின் (எஸ்.எல் / யுகே) தேர்வை முடித்தவர்களுக்கு பின்வரும் பாடங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது
IBSL Subjects | AA1 Exempted Subjects |
---|---|
வணிக கணக்கியல் | 101 நிதிக் கணக்கீடு (FAC) |
வணிக கணிதம் மற்றும் புள்ளி விபரவியல் | 102 வியாபார கணிதமும் புள்ளி விபரவியலும்(BMS) |
பொருளியல் கோட்பாடுகள் | 103 பொருளியல் (ECN) |
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் முகாமைத்துவம் மற்றும் வர்த்தகம் சார்ந்த பட்டங்களில் முதலாம் மற்றும் இரண்டாம் வருட பரீட்சைகள்.
(A) இலங்கை பட்டயக் கணக்காளர்களுக்கான வணிக மட்டம் 1 மற்றும் 11 பரீட்சைகளில் (2020-2025) ஒவ்வொரு பாடங்களிலும் சித்தியடைந்த மாணவர்களுக்கான விலக்களிப்பு திட்டம் பின்வருமாறு.
இலங்கை பட்டயக் கணக்காளர்களுக்கான வணிக மட்ட பரீட்சைகளில் சித்தியடைந்த பாடங்கள் | AAT இலங்கை பரீட்சைகளின் கீழ் விலக்களிக்கப்படும் பாடங்கள் |
---|---|
வணிக மட்டம் 1 | |
நிதியியல் கணக்கீடு | 101 நிதிக்கணக்கீடு (FAC) 201 உயர் நிதிக்கணக்கீடு மற்றும் கிரயவியல் (AFC) |
நிதியியல் கணிதம் மற்றும் புள்ளிவிபரவியல் | 102 வணிகக் கணிதம் மற்றும் புள்ளிவிபரவியல் (BMS) |
வணிகச் சட்டம் | 203 வணிகச் சட்டம் (BLA) |
வணிகச் சூழல் மற்றும் பொருளியல் | 103 பொருளியல் (ECN) 104 வணிகச் சூழல் (BEN) 204 வணிக முகாமைத்துவம் (BMA) |
வணிக மட்டம் 11 | |
கணக்காய்வு வணிகச் செயற்பாடுகள் மற்றும் டிஜிற்றல் மயமாக்கல் | 303 நிதியியல் கட்டுப்பாடும் கணக்காய்வும் (FCA) |
முகாமைக் கணக்கீடு | 302 முகாமைக் கணக்கீடும் நிதியியலும் (MAF) |
டிஜிற்றல் வணிக தந்துரோபாயம் | 202 தகவல் முறைமையும் எண்முறைச் சூழலும் (ISD) |
வணிகத் தொடர்பாடல் | 310 வணிகத் தெடர்பாடல் (BC) |
(B) வணிக மட்டம் 1 உடன் திறன் பாடங்களையும் (skill pillor) பூரணமாக நிறைவுசெய்த மாணவர்கள் AAT இலங்கையினுடைய இறுதிப் பரீட்சையினை பூர்த்தி செய்தவராக வருவதற்கு பின்வரும் பாடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்
(C) வணிக மட்டம் 1 மற்றும் 11 உடன் திறன் பாடங்களையும் (skill pillor பூரணமாக நிறைவுசெய்த மாணவர்கள் AAT இலங்கையினுடைய இறுதிப் பரீட்சையினை பூர்த்தி செய்தவராக வருவதற்கு பின்வரும் பாடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்
(D)நிறைவேற்று மட்டம் 1 மற்றும் 11 பரீட்சை (2015-2020) இலுள்ள ஒவ்வொரு பாடங்களையும் பூர்த்தி செய்த மாணவர்கள் பின்வரும் பாடங்களில் விலக்களிப்பு பெற முடியும்.
இலங்கை பட்டயக் கணக்காளர்களுக்கான நிர்வாக மட்ட பரீட்சைகளில் சித்தியடைந்த பாடங்கள் | AAT இலங்கை பரீட்சைகளின் கீழ் விலக்களிக்கப்படும் பாடங்கள் |
---|---|
KE 1 நிதிக் கணக்கீடு மற்றும் அறிக்கையிடலுக்கான அடிப்படைகள் |
101 நிதிக்கணக்கீடு (FAC) 201 உயர் நிதிக்கணக்கீடு மற்றும் கிரயவியல் (AFC) |
KE2 முகாமைக் கணக்கீட்டு தகவல்கள் |
102 வணிகக் கணிதம் மற்றும் புள்ளி விபரவியல் (BMS) 302 முகாமைக் கணக்கீடும் நிதியியலும் (MAF) |
KE3 வரியியல் மற்றும் சட்டத்திற்கான அடிப்படைகள் | 203 வணிகச் சட்டம் (BLE) |
KE4 செயற்பாடுகள்இ உறுதிப்படுத்தல் மற்றும் விழுமியங்கள் | 303 நிதியியல் கட்டுப்பாடும் கணக்காய்வும் (FCA) |
KE5 முகாமைத்துவத்திற்கான வணிக நுண்ணறிவு | 103 பொருளியல் (ECN) 104 வணிகச் சூழல் (BEN) 204 வணிக முகாமைத்துவம் (BMA) |
(E) இலங்கை பட்டயக் கணக்காளர்களுக்கான நிர்வாக மட்டம் 1 மற்றும் 11 பரீட்சைகளை (2015-2020) பூரணமாக நிறைவுசெய்த மாணவர்கள் AAT இலங்கையினுடைய இறுதிப் பரீட்சையினை பூர்த்தி செய்தவராக வருவதற்கு பின்வரும் பாடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்
(F) இலங்கை பட்டயக் கணக்காளர்களுக்கான நிர்வாக மட்டம் 1 மற்றும் 11 பரீட்சைகளுடன் (2015-2020) திறன் பாடங்களையும் (skill pillor) பூரணமாக நிறைவுசெய்த மாணவர்கள் AAT இலங்கையினுடைய இறுதிப் பரீட்சையினை பூர்த்தி செய்தவராக வருவதற்கு பின்வரும் இரு பாடங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்
குறிப்பு 1
AAT இலங்கையினுடைய ஆளுகைக் குழுவிற்காக ஏற்றுக்கொள்ளப்படும் ஏனைய தகைமைகள் தனித் தனியாக தீர்மானம் செய்யப்படும்.
குறிப்பு 2
விலக்களிப்புகளை வழங்குவதற்காக அனுமதிக்கப்பட்ட வரையறைகள் நடைமுறையிலுள்ள பாடத்திட்டத்தின் கீழ் மீளாய்வு செய்யப்படவில்லை எனில் அவ்வாறான நிலைகளில் குறிப்பிட்ட அந்த காலப்பகுதியில் நடைமுறையிலிருந்த வரையறைகளுக்கு பொருத்தமான விலக்களிப்புகள் வழங்கப்படும்