செய்முறைப் பயிற்சியை பெற்பெற்றுக்கொள்ளும் இடம்
செய்முறைப் பயிற்சி ஓர் அமைச்சு, அரச கூட்டுத்தாபானம், அரசாங்க திணைக்களம், நியதி அதிகாரசபை, வங்கித்தொழில் நிறுவனம், ஹோட்டல், வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கம்பனி, பட்டயக் கணக்காளர் தொழில் நிறுவனம், வரி ஆலோசனை நிறுவனம், முகாமைத்துவ ஆலோசனை நிறுவனம், அங்கீகரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நிறுவனம் அல்லது AAT இலங்கை கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் ஒரு நிறுவனமாக இருந்துவர முடியும். அந்த இடங்களிலிருந்து கணக்கீடு மற்றும் கணக்காய்வு தொடர்பான அனுபவத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
பயிற்சித் துறைகள்
கணக்கேடுகள், பரீட்சை மீதி, நிதிக்கூற்றுக்கள் / அறிக்கைகள், வரி, நியதி பூர்வ தேவைகள், வரவுசெலவுத்திட்ட தயாரிப்பு, கிரயம், செலவு மதிப்பீடுகள், பொருள் பட்டியல்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் என்பவற்றின் தயாரிப்பின் போது வேலை செய்த மணித்தியாலங்கள் திட்டவட்டமாக குறிப்பிடப்படுதல் வேண்டும்.
விதித்துரைக்கப்பட்டிருக்கும் பயிற்சிக் காலப் பிரிவு - ஒரு வருடம்
பயிற்சிப் பதிவேடு
மாணவர்கள் கல்வி மற்றும் பயிற்சிப் பிரிவிலிருந்து “செய்முறை கணக்கீட்டு அனுபவ பதிவேட்டு படிவத்தை” பெற்றுக்கொள்வது அவசியமாகும். அதனுடன் அவர்கள் இந்த படிவத்தின் போதிய எண்ணிக்கையிலான (ஆகக்குறைந்தது ஆண்டொன்றுக்கு 52 பிரதிகள்) நிழற்படப் பிரதிகளையும் பெற்றுக்கொண்டு, அவற்றை பொருத்தமான விதத்தில் நிரப்புதல் வேண்டும்.
ஒவ்வொரு பதிவேட்டு படிவத்திலும் விண்ணப்பதாரியின் கையொப்பம், மேற்பார்வை செய்யும் அங்கத்தவரின் கையொப்பம் என்பவற்றுடன் கம்பனியின் இலச்சினை என்பவற்றின் அசல் வடிவம் பொறிக்கப்படுதல் வேண்டும்.
ஒரு பயிலுநரின் அனுபவம் செய்முறை கணக்கீட்டு அனுபவ படிவத்தில் பக்கம் 04 இல் தரப்பட்டிருக்கும் 10 துறைகளில் ஆகக்குறைந்தது 03 துறைகளை உள்ளடக்குதல் வேண்டும்.
மேற்பார்வை செய்யும் அங்கத்தவர்கள் பின்வருபவர்களில் எவராகவும் இருக்க முடியும் :
அக்டோபர் 1, 2020க்கு முன் பயிற்சியைத் தொடங்கும் மாணவர்களுக்குப் பொருந்தும்
அக்டோபர் 1, 2020 அன்று அல்லது அதற்குப் பிறகு பயிற்சியைத் தொடங்கும் மாணவர்களுக்குப் பொருந்தும்