AAT பரீட்சைகளுக்கு விண்ணப்பம் செய்யும் பொருட்டு நீங்கள் இலங்கை AAT கழகத்தில் ஒரு மாணவராக உங்களை பதிவு செய்திருத்தல் வேண்டும்.
பதிவு செய்வதற்கான ஆகக்குறைந்த தகைமைகள்
இலங்கை AAT கழகத்தில் மாணவராக பதிவு செய்து கொள்ளும் பொருட்டு நீங்கள் பின்வரும் குறைந்தபட்சத் தகைமைகளில் ஒன்றை பூர்த்தி செய்திருப்பது அவசியமாகும்::
அல்லது
அல்லது
அல்லது
அல்லது
மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு தயவு செய்து நீங்கள் விரும்பும் மொழியில் கீழே தரப்பட்டுள்ள விளக்கக் கையேட்டை தரவிறக்கம் செய்யவும்
மாணவர்கள் பின்வரும் செயன்முறையை பின்பற்றுவதன் மூலம் ஒன்லைன் ஊடாக இலங்கை AAT கழகத்தில் தம்மைப் பதிவு செய்து கொள்ள முடியும்.
மாணவர் வழிகாட்டி (Student’s Guide) ஒன்றை பெற்றுக்கொள்ளல்
மாணவர் வழிகாட்டி என்பது, இலங்கை AAT நிறுவனம், AAT தகைமை, பரீட்சைக் கட்டமைப்புக்கள், பதிவு செய்வது எவ்வாறு என்பது தொடர்பான தகவல்கள், விலக்களிப்புக்கள் (Excemptions) தொடர்பான விபரங்கள் மற்றும் கல்விச் சேவை தொடர்பான விரிவான விபரங்களையும் உள்ளடக்கியிருக்கும் அனைத்துமடங்கிய ஒரு கைநூலாகும். பதிவு மற்றும் விலக்களிப்புக்கள் என்பவற்றுக்கான விண்ணப்பப் படிவங்களை கொண்டிருப்பதனால் பதிவு செய்வதற்கென கட்டாயமாக இந்த வழிகாட்டி தேவைப்படுகின்றது. ஓப்லைனில் (Offline) விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் இந்த வழிகாட்டியை கொள்வனவு செய்தல் வேண்டும்.
மாணவர் வழிகாட்டியை பெற்றுக்கொள்ளும் விதம்:
பின்வருவனவற்றை தபால் மூலம் இலங்கை AAT கழகத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும்
அல்லது
முறையாக பூர்த்தி செய்யப்பட்ட பதிவு விண்ணப்பப் படிவம் AAT அலுவலகத்தில் கையளிக்கப்படுதல் வேண்டும்; அல்லது பதிவுத் தபால் மூலம் பின்வரும் ஆவணங்களுடன் இணைந்த விதத்தில் ‘Head (Registration & Membership), AAT Sri Lanka முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்::
அசல் சான்றிதழ்களில் கல்வி நிறுவனத்தின் அதிபரின் / பிரதி அதிபரின் இலச்சினை பொறிக்கப்பட்டிருத்தல் வேண்டும். அத்துடன் அந்த இலச்சினை அதிபரின் / பிரதி அதிபரின் பெயரையும் உள்ளடக்குதல் வேண்டும்..
இந்தக் கட்டணத்தை தேசிய சேமிப்பு வங்கி அல்லது ஹற்றன் நஷனல் வங்கி என்பவற்றின் எந்தவொரு கிளையிலும் செலுத்த முடியும் என்ற விடயத்தை தயவு செய்து கவனிக்கவும். உறுதிச்சீட்டின் நிழற்படப் பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மேலே குறிப்பிடப்பட்ட ஆவணங்கள் ஒவ்வொரு பரீட்சைக்குமான பதிவு முடிவுத் திகதிகளுக்கு முன்னர் AAT அலுவலகத்திற்கு கிடைத்தல் வேண்டும். எந்தப் பதிவு முறை தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், பதிவுப் படிவம் பூர்த்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்ற விடயத்தை மாணவர்கள் கவனித்தல் வேண்டும். (விண்ணப்பம் Offline இல் மேற்கொள்ளப்பட்டால் மாணவர் வழிகாட்டியில் இணைக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவம் நிரப்பப்படுதல் வேண்டும்)
பதிவு முடிவுத் திகதிகள்
நீங்கள் எந்தவொரு நேரத்திலும் இலங்கை AAT கழகத்தில் ஒரு மாணவராக உங்களை பதிவு செய்து கொள்ள முடியும். எவ்வாறிருப்பினும், AAT கழகத்தின் ஜனவரி மற்றும் யூலை மாதப் பரீட்சைகள் தொடர்பான பதிவுக்கான முடிவுத் திகதிகள் வருமாறு:
ஜனவரி மாதப் பரீட்சை - யூலை 31 ஆம் திகதிக்கு முன்னர்
யூலை மாதப் பரீட்சை - ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர்
மாணவர் அடையாள அட்டை
நீங்கள் உங்கள் பதிவு விண்ணப்பத்தை அனுப்பி, அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னர் உங்களுக்கு மாணவர் அடையாள அட்டை வழங்கப்படும். மாணவர் அடையாள அட்டை கிடைத்ததன் பின்னர் அதற்கென ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் நீங்கள் உங்களுடைய வழமையான கையொப்பத்தை இடுதல் வேண்டும்.
ஏஏடி மாணவர் பதிவுக்கு விண்ணப்பிக்க திட்டமிடுபவர்களுக்கான ஒன்லைன் கட்டணம் செலுத்தும் வசதி.
ஏஏடி வகுப்புக்களை பின்பற்றி அல்லது சுயகற்றல் மூலம் ஏஏடியை தொடரும் மாணவர்களால் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாட்டில் நிலவும் தற்போதய சூழ்நிலை காரணமாக ஏஏடி பதிவுக்கான கட்டணங்களை செலுத்த முடியாத நிலைமையினை எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு நீங்கள் வங்கிக்கு சென்று பதிவுக்கட்டணம் செலுத்த முடியாத நிலையில் கடனட்டையினை (மாஸ்ரர் அல்லது விசா அட்டை) பயன்படுத்தி www.aatsl.lk என்ற இணையத்தினூடாக மாணவர் பதிவுக்கட்டணங்களை ஏற்க முடிவு செய்துள்ளோம். ஆகையால் நீங்கள் இந்த வசதியைப் பெறுவீர்கள் என்றும் ஏஏடி பதிவுக்கு விண்ணப்பிப்பதற்கு அவசியமானவற்றை செய்வீர்கள் என்றும் எதிர்பார்க்கின்றோம்.
ஒன்லைன் கட்டணம் செலுத்துவதற்கான படிமுறைகள்
படிமுறை 1
https://aatsl.lk/index.php/en/online-payment
படிமுறை 2
படிமுறை 3
படிமுறை 4
படிமுறை 5
படிமுறை 6
ஒன்லைன் பற்றுச்சீட்டுடன் பதிவுசெய்வதற்கான விண்ணப்பத்தை அனுப்பும் படிமுறைகள்
நடைமுறையிலுள்ள உள்ள சூழ்நிலையில் மாணவர் பதிவு விண்ணப்பத்தின் அசல் மற்றும் துணை ஆவணங்களை தபால் மூலம் அனுப்புவதில் உள்ள கட்டுப்பாடுகளை கருத்தில்கொண்டு நீங்கள் அவற்றை மின்னஞ்சலூடாக அனுப்ப முடியும். கட்டணத்தை ஒன்லைனூடாக செலுத்திய பின்னர் விண்ணப்ப படிவம் மற்றும் துணை ஆவணங்களின் புகைப்படம் அல்லது ஸ்கான் நகலை (Scan Copy) 2020aatreg@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியும்.
இணைக்கவேண்டிய ஆவணங்கள்.
சிறப்புக் குறிப்பு : அசலை ஸ்கான் செய்யும் போது அல்லது புகைப்படம் எடுக்கும் போது அவை தெளிவாக இருப்பதை உறுதிப்படுத்துக. உங்கள் புகைப்படங்களில் ஒன்று விண்ணப்பத்தில் ஒட்டப்பட வேண்டும். மற்றொன்று இணைப்பாக மின்னஞ்சல் செய்யப்பட வேண்டும்.
இது தொடர்பாக உங்களுக்கு ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால் நீங்கள் ஏஏடி உடன் 0777 559 669 என்ற இலக்கத்திற்கு What’s app / Viber ஊடாக அல்லது 0777 559 669 / https://www.facebook.com/pg/AATSriLankaOfficial/about/?ref=page_internalஎன்ற இணைய முகவரி ஊடாக தொடர்பு கொள்ளவும்.
பதிவுக் கட்டணம்
தாமதமான விண்ணப்பம்:
பதிவு முடிவுத் திகதிக்கு பின்னர் அதிகபட்சமாக ஏழு நாட்களினுள் பின்வரும் கட்டணங்களை செலுத்துவதற்கான, தாமதமடைந்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்:
கவனத்தில் கொள்ளவும்: மாணவர் பதிவுக் கட்டணங்கள் முன்னறிவித்தல் இன்றி திருத்தத்திற்கு உட்பட்டது.
ஆரம்பப் பதிவு குறிப்பிட்ட வருடத்தின் டிசம்பர் மாதம் 30 திகதி வரையில் மட்டுமே செல்லுபடியாகும் என்ற விடயத்தை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அடுத்து வரும் வருடம் தொடர்பாக நடப்பு வருடத்தின் டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் பதிவை புதுப்பித்தல் வேண்டும். இவ்விதம் AAT இலங்கை கழகத்தின் இறுதிப் பரீட்சைகளை பூர்த்தி செய்யும் வரையில் பதிவு புதுப்பிக்கப்படுதல் வேண்டும்.
AAT ஆல் நடத்தப்படும் வகுப்புக்கள்
அங்கீகாரமளிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் (AECs)
கற்றல் பொதிகள்
பாடப்புத்தகங்களின் விலைகள் பின்வருமாறு. மொழியின் அடிப்படையில் பாடப்புத்தகங்களின் விலைகளில் வேறுபாடுகள் இல்லை.
மட்டம் | பாடம் | அச்சிடப்பட்ட புத்தக விலை (Rs.) | இலத்திரனியல் (E -Study) புத்தக விலை (Rs.) |
---|---|---|---|
மட்டம் 01 | 101 – நிதிக் கணக்கீடு (FAC)) | 1000/- | 300/- |
102 – வணிகக் கணிதமும் புள்ளிவிபரவியலும் (BMS) | 1250/- | 375/- | |
103 – பொருளியல் (ECN) | 950/- | 275/- | |
104 – வணிகச் சூழல் (BEN) | 1000/- | 375/- | |
மட்டம்-I மொத்தம் | 4200/- | 1325/- | |
மட்டம் 02 | 201 – உயர் நிதிக்கணக்கீடும் கிரயவியலும் (AFC) | 1500/- | 425/- |
202 – டிஜிட்டல் சூழலில் தகவல் தொழில் நுட்பம் (ISD) | 850/- | 325/- | |
203 – வணிகச் சட்டம் (BLA) | 1100/- | 325/- | |
204 – வணிக முகாமைத்துவம் (BMA) | 1450/- | 350/- | |
மட்டம்-II மொத்தம் | 4900/- | 1425/- | |
மட்டம் 03 | 301 – நிதி அறிக்கையிடல் (FAR) | 1450/- | 450/- |
302 – முகாமைக் கணக்கீடும் நிதியியலும் (MAF) | 1000/- | 375/- | |
303 – நிதியியல் கட்டுப்பாடும் கணக்காய்வும் (FCA) | 950/- | 350/- | |
304 – கூட்டுறவு மற்றும் தனிநபர் வரியியல் (CPT) | 900/- | 375/- | |
மட்டம் -III மொத்தம் | 4300/- | 1550/- | |
TC | 310 - வணிகத் தொடர்பாடல் (BCS) | 750/- | 200/- |
பரிந்துரைக்கப்பட்ட பதில்கள்
மாதிரி வினாத்தாள்கள்
AAT வருடத்திற்கு இரு தடவைகள் (ஜனவரி மாதத்திலும் யூலை மாதத்திலும்) பரீட்சைகளை நடத்துகின்றது. இப்பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடத்தப்படுவதுடன், அனைத்து மாகாணங்களிலுள்ள 14 நகரங்களில் அவை நடத்தப்படுகின்றன. AAT இலங்கை கழகத்தின் பரீட்சைகளின் ஒரு முக்கியமான சிறப்பம்சம் பரீட்சை திகதியிலிருந்து 60 நாட்களுக்குள் பெறுபேறுகள் வெளியிடப்படுவதாகும். AAT பரீட்சகர்களின் அறிக்கைகளை வெளியிடுவதன் மூலமும், மாணவர்கள் குறைவாகப் புள்ளிகளை பெறும் துறைகள் தொடர்பாக கட்டுரைகளை வெளியிடுவதன் மூலமும், எமது மாணவர் செய்தி விபரணம் மற்றும் AAT இலங்கை இணையதளம் என்பவற்றில் அவற்றை வெளியிடுவதன் மூலமும் மாணவர்கள் சித்தியடையும் விகிதத்தை விருத்தியடையச் செய்வதற்கு நாங்கள் இடையறாது முயற்சித்து வருகின்றோம்..
பரீட்சைகளுக்கு விண்ணப்பம் செய்வது தொடர்பான பொதுவான அளவுகோல்கள் மற்றும் தகவல்கள்
நீங்கள் (திறமைச் சோதனை - கப்ஸ்டோன் - பரீட்சையையும் உள்ளடக்கிய விதத்தில்) AA3 மூன்று மட்ட பரீட்சையில் சித்தியடைந்த பின்னர் பின்வரும் தொழில்சார் பரீட்சைகளிலிருந்து விலக்களிப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு தகைமை பெறுவீர்கள் :
© AAT Sri Lanka. All rights reserved.
Solution by Affno