மாணவர் புதுப்பித்தல் என்றால் என்ன?
AAT இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் AAT தேர்வுகளை முடிக்கும் வரை தங்களது மாணவத்துவத்தை செயலில் வைத்திருத்தல் வேண்டும். ஒரு குறிப்பிட்ட கலண்டர் ஆண்டிற்கான ஒரு மாணவரின் ஆரம்ப பதிவு அல்லது புதுப்பிக்கப்பட்ட மாணவர் பதிவு, பதிவு / புதுப்பித்தல் ஆண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும் மற்றும் எதிர்வரும் ஆண்டிற்கு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட ஆண்டில் நீங்கள் ஒரு தேர்வுக்கு விண்ணப்பிக்குறீர்களா அல்லது செயலில் உள்ள மாணவராக இருக்க விரும்பாமை என்பதை பொருட்படுத்தாமல் வருடாந்த புதுப்பித்தலை செய்ய வேண்டப்படுகின்றீர்கள். செயலில் உள்ள மாணவர்கள் மட்டுமே AAT தேர்வுகள் அல்லது விலக்குகளுக்கு விண்ணப்பிக்க அல்லது கடிதங்களைப் பெற்றுக்கொள்ள மற்றும் AAT இனால் வழங்கப்படும் முன்னுரிமைகளுக்கு தகுதியூடையவராக இருக்க முடியூம்.
புதுப்பித்தல் அறிவிப்புகள் ஒரு குறிப்பிட்ட கலண்டர் ஆண்டின் அனைத்து செயலில் உள்ள மாணவர்களுக்கும் ஆண்டின் இறுதியில் தபால் மூலம் அனுப்பப்படுகின்றன, மேலும் மாணவர்கள் டிசம்பர் 30ஆம் தேதிக்கு முன்பு புதுப்பிக்க வேண்டும். புதுப்பித்தல் அறிவிப்புகள் டிசம்பர் மாத தொடக்கத்தில் பெறப்படாவிட்டால்இ மாணவர்கள் AAT (தொடர்புகொள்ள வேண்டும். மாணவர்கள் கடிதங்களை சரியான நேரத்தில் முறையாகப் பெறுவதற்காக முகவரி) தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை எழுத்துபூர்வமாக உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
புதுப்பித்தல் கட்டணம் எவ்வளவு மற்றும் காலக்கெடு என்ன?
இன்றுவரை செயலில் உள்ள மாணவர்களுக்கான தற்போதய மாணவர் புதுப்பித்தல் கட்டணம் ரூ. 2,250/=. மூன்று துரிதமாக புதுப்பித்தல் ரூ.500 அபராதத்திற்கு உட்பட்டது (முடிவுத்திகதிக்கு பின்னர் செலுத்தப்பட்டால்). ஒரு மாணவர் ஒரு வருடத்திற்கு மேல் புதுப்பிக்கப்படாவிட்டால் இதுபோன்ற ஒவ்வொரு புதுப்பிக்கத்தவறிய ஆண்டுகளுக்குமான தாமதக்கட்டணங்களுடன் நிலுவைத்தொகையூடன் செலுத்தி புதுப்பிக்கப்படல் வேண்டும். எந்தவொரு நிலுவைத்தொகையூம் அபராதமும் ஏற்படாமல் இருக்க மாணவர்கள் ஆண்டுதோறும் புதுப்பிக்க அறிவுூறுத்தப்படுகிறார்கள்.
புதுப்பித்தல் கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது?
பின்வரும் கட்டணத் தெரிவுகள் உள்ளன.
1. வங்கி மூலம்
NSB (A/C No. 90_ _ _ 2301989)
அல்லது
HNB (A/C No. 039020327099)
Paying Vouchers: Use the general cash deposit slips which are available at the branches of the selected bank.
2. ஒன்லைன் மூலம் - https://aatsl.lk/index.php/en/online-payment
சிறப்புக் குறிப்பு
கொடுப்பனவுக் குறிப்பு எண்
ஏதாவது ஒரு முறையில் கொடுப்பனவை மேற்கொள்ளும் பொழுது (ஒன்லைன் அல்லது வங்கி மூலம்) 44 எனும் இலக்கத்தை தொடர்ந்து மாணவர் பதிவு எண்ணைக் கொண்ட 7 இலக்க எண்ணை சரியாக தட்டச்சு செய்க. (உ-ம் : 44XXXXXXX). இது மிக முக்கியமான படி. எனவே இதை எவ்வித தவறுமின்றி சரியாக எழுதுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் இதை நீங்கள் சரியாக எழுதவில்லை எனில், உங்கள் கட்டணம் வேறு ஒருவருடைய கணக்கில் வரவு வைக்கப்படும் உங்கள் கட்டணம் வேறு ஒருவருடைய கணக்கில் வரவு வைக்கப்படும்.பின்னர் அதை சரிசெய்ய முடியாது. 7 இலக்கங்களைக் கொண்ட மாணவர் பதிவு எண் தெரியவில்லை எனில், தயவுசெய்து ஏஏடியூடன் 0112 559 669 என்ற தொலைபேசி மூலம் அல்லது registration@aatsl.lk மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு சரியான மாணவர் பதிவு எண்ணை பெற்றுக்கொள்ளவும்.
புதுப்பித்தல் கட்டணத்தை சரியான கொடுப்பனவுக் குறிப்பு எண்ணைப் பயன்படுத்தி மேற்கொண்டால்இ கட்டணம் செலுத்தி 3 நாட்களுக்குள் தானாகவே மாணவர் புதுப்பித்தல் இடம்பெறும். (மாணவர்கள் தங்கள் மாணவர் அடையாள அட்டையை புதுப்பித்தல் முத்திரைக்காக AAT க்கு அனுப்ப தேவையில்லை.)
2024 Renewal notices for January 2024 intake students (those registered from July 2023 to December 2023)
Download - 2024 Renewal notices for January 2024 intake students - Tamil