MAAT
|
AAT இன் அங்கத்துவர்
|
SAT
|
சிரேஷ்ட கணக்கியல் தொழில்நுட்பவியலாளர்
|
FMAAT
|
AAT இன் சிறப்பு அங்கத்துவர்
|
1.
|
உங்களுடைய பெயருக்கு பின்னால் நீங்கள் உங்களுடைய அங்கத்துவ நிலையை எடுத்துக்காட்டும் பட்டங்களை (MAAT / SAT / FMAAT) பயன்படுத்த முடியும்.
|
2.
|
அங்கத்தவர்களின் போட்டலில் உங்களது விபரம்.
|
3.
|
“பயிற்சி அங்கத்தவர்;” (MIP) ஒருவராக செயற்படுவதற்கான வாய்ப்பு அதற்குரிய தகைமைகளைப் பெற்றிருப்பின் உங்களுக்கு கிடைக்கும்.
|
4.
|
நீங்கள் (தகைமை பெற்ற பின்னர் 10 வருட அனுபவத்தை கொண்டிருக்கும் நிலையில்) உள்நாட்டு இறைவரி நோக்கங்களுக்காக “அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியாக” செயற்பட்டு, “அங்கீகரிக்கப்பட்ட கணக்காளர்” அந்தஸ்தை பெற்றுக் கொள்ள முடியும். (FMAAT உள்ளவர்களுக்கு மட்டும்).
|
5.
|
உங்களுக்கு “Insearch” என்ற அங்கத்தவர் சஞ்சிகை இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.
|
6.
|
நீங்கள் அங்கத்தவர் நாள் நிகழ்ச்சித்திட்டங்கள், வருடாந்த மாநாடுகள், மாதாந்தக் கருத்தரங்குகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றில் பங்கேற்க முடியும். இவை AAT கழகத்தினால் சலுகை கட்டண விகிதங்களில் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
|
7.
|
நீங்கள் AAT கழகத்தின் பல்வேறு கமிட்டிகளில் ஓர் அங்கத்தவராக பணியாற்ற முடியும் (தற்பொழுது சுமார் 9 கமிட்டிகள் இருந்து வருகின்றன).
|
8.
|
எமது பரீட்சை செயற்பாடுகளில் பின்வரும் விதத்தில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கலாம்:
(i) விடைத்தாள்களுக்கு புள்ளிகளை வழங்கும் பரீட்சகர். (ii) பரீட்சை நிலையம் ஒன்றின் மேற்பார்வையாளர். (iii) வினாப் பத்திரங்களை தயாரிப்பவர் / நெறிப்படுத்துபவர் / மொழிபெயர்ப்பவர். |
9.
|
AAT வணிகப் பள்ளியின் HDAF, MDP கணினி, வரி என்பன தொடர்பான கற்கை நெறிகளில் விசேட கட்டண விகிதங்களில் நீங்கள் சேர்ந்துகொள்ள முடியும்.
|
10.
|
ஹோட்டல்கள், உணவகங்கள், உணவுப் பண்டங்களை வழங்கும் நிலையங்கள், புத்தக நிலையங்கள், மூக்குக் கண்ணாடி நிலையங்கள், மருத்துவமனைகள், தளபாடங்கள், நகைகள், சஞ்சிகைகள், சுற்றுலாக்கள், வாகன சுத்திகரிப்பு நிலையங்கள், ஆயத்த ஆடைகள், பாதணிகள் முதலிய வசதிகளை நீங்கள் பிந்திய கழிவு விகிதங்களுடனும், விசேட சேவைகளுடனும் பெற்றுக்கொள்ள முடியும்.
|
11.
|
HNB வங்கியிலிருந்து ஒரு Affinity கடன் அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.
|
MAAT
|
AAT பரீட்சைக்கு ஊடாக
|
1.கட்டம் III / இறுதிப் பரீட்சை மற்றும் 02 வருட கால செய்முறைப் பயிற்சி / அனுபவம் என்பவற்றை வெற்றிகரமாக பூர்த்தி செய்தல் (மாணவர் பயிற்சிப் பதிவேடுகள் சான்றாக சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்). இது 2015 யூலை மாதப் பரீட்சைகளின் பின்னர் இறுதிப் பரீட்சையில் சித்தியடைபவர்களுக்கு பொருத்தமற்றதாகும்.
அல்லது
2. AAT இலங்கை கழகத்தின் AAT வணிகப் பள்ளியினால் நடத்தப்படும் Talent Capstone பரீட்சையுடன் இணைந்த விதத்தில் AAIII / கட்டம் III / இறுதிப் பரீட்சை மற்றும் 1 வருட கால செயன்முறைப் பயிற்சி/ அனுபவம் + 2 நாள் மக்கள் மற்றும் தலைமைத்துவத் திறன்கள் செயலமர்வு (PLS) என்பவற்றை வெற்றிகரமாக பூர்த்தி செய்திருத்தல். அல்லது
3. கட்டம் III / இறுதிப் பரீட்சை மற்றும் (பயிற்சி தொடர்பான பதிவேடுகளுக்கு பதிலாக) 4 வருட கால வேலை அனுபவம் என்பவற்றை வெற்றிகரமாக பூர்த்தி செய்திருத்தல் (இது யூலை 2015 பரீட்சைகளின் பின்னர் இறுதிப் பரீட்சைகளில் சித்தியடைபவர்களுக்கு பொருந்தாது). (AAT இல் பதிவு செய்த பின்னர்) கணக்கியல் / கணக்காய்வு /வங்கித்தொழில் / வரி அல்லது பல்கலைக்கழக விரிவுரை ஏதாவதொன்றில் 04 வருட கால வேலை அனுபவத்தைக் கொண்டிருக்கும் (கணக்கியல் / கணக்காய்வு / நிதி / வரி) AAT இறுதித் தேர்வில் தேறியிருப்பவர்கள் பயிற்சிப் பதிவேடுகளுக்கு பதிலாக, தமது விவரங்களை உள்ளடக்கிய சேவைக் கடிதத்தை / கடிதங்களை சமர்ப்பிப்பதன் மூலம் MAAT அங்கத்துவத்துக்கு விண்ணப்பம் செய்ய முடியும். அரசாங்கத்தில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார்துறை நிறுவனங்களில் சிரேஷ்ட பதவிகளை வகித்து வரும் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் (AAT பதிவின் பின்னர்) சந்தைப்படுத்தல் துறையில்/ மனித வளங்கள் துறையில் 04 வருடங்களுக்கு மேற்பட்ட வேலை அனுபவத்தை கொண்டிருக்கும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் அங்கத்துவத்துக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள். பழைய பாடத்திட்டத்தின் கீழ் பதிவு செய்திருந்த போதிலும், புதிய பாடத்திட்டத்தின் கீழ் (அதாவது யூலை 2015 இன் பின்னர், பரீட்சைகளை பூர்த்தி செய்திருக்கும் மாணவர்களும் அங்கத்துவத்துக்கு விண்ணப்பம் செய்ய முடியும் – அதாவது AAT வணிகப் பள்ளியினால் நடத்தப்படும் 02 நாள் மக்கள் மற்றும் தலைமைத்துவ திறன்கள் செயலமர்வை (PLS) பூர்த்தி செய்திருப்பதுடன் இணைந்த விதத்தில் 04 வருட கால வேலை அனுபவத்தை கொண்டிருப்பவர்கள் இவ்விதம் விண்ணப்பிக்க முடியும். |
நேரடி
|
1. Licentiate தகுதி / Intermediate தகுதி /இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் CSBA சான்றிதழ் மற்றும் 02 வருட செய்முறைப் பயிற்சி /அனுபவம் (சான்றாக சேவைக் கடிதங்கள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்) ஏஏடி வணிகப்பள்ளியினால் நடத்தப்படும் 2 நாள் மக்கள் மற்றும் தகைலகைமத்துவத் திறன்கள் செயலமர்வு (PLS) என்பவற்றை பூர்த்தி செய்திருத்தல்.
அல்லது
2. CIMA (UK) / ACCA (UK) உயர் டிப்ளோமா சான்றிதழ் மற்றும் 02 வருட கால செய்முறைப் பயிற்சி / அனுபவம் (சான்றாக சேவைக் கடிதங்கள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்)ஏஏடி வணிகப்பள்ளியினால் நடத்தப்படும் 2 நாள் மக்கள் மற்றும் தகைலகைமத்துவத் திறன்கள் செயலமர்வு (PLS) என்பவற்றை பூர்த்தி செய்திருத்தல்..
அல்லது
CIMA (UK) / ACCA (UK) உயர் டிப்ளோமா சான்றிதழ் மற்றும் 02 வருட கால செய்முறைப் பயிற்சி / அனுபவம் (சான்றாக மாணவர் பயிற்சி பதிவேடுகள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.)ஏஏடி வணிகப்பள்ளியினால் நடத்தப்படும் 2 நாள் மக்கள் மற்றும் தகைலகைமத்துவத் திறன்கள் செயலமர்வு (PLS) என்பவற்றை பூர்த்தி செய்திருத்தல். |
|
SAT
|
தரமுயர்த்துதல்
|
MAAT தரத்தை பெற்றுக்கொண்ட பின்னர் 05 வருட கால நிறைவேற்று மட்டத்திலான கணக்கியல் அனுபவம் மற்றும் 120 CPD Credits களை பூர்த்தி செய்திருத்தல் (சான்றாக சேவைக் கடிதங்கள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்).
|
நேரடி
|
மூன்று சம்பவக் கற்கைகளுடன் (Case Study) இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனம் ICASL / CIMA (UK) / ACCA (UK) இறுதிப் பரீட்சை மற்றும் 03 வருட கால சம்பந்தப்பட்ட செய்முறைப் பயிற்சி / அனுபவம் (சான்றாக சேவைக் கடிதங்கள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்)
|
|
FMAAT
|
தரமுயர்த்துதல்
|
SATதரத்தை பெற்றுக்கொண்ட பின்னர் 05 வருட கால சிரேஷ்ட கணக்கியல் அனுபவம் மற்றும் 80 CPD Credits பூர்த்தி செய்திருத்தல் (ஆதாரமாக சேவைக் கடிதங்கள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்)
|
நேரடி
|
(இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனம்) ICASL / CIMA (UK) / ACCA (UK) அங்கத்துவம் மற்றும் தகைமையை பெற்றுக்கொண்ட பின்னர் 03 வருட கால முகாமைத்துவ அனுபவம் (சான்றாக சேவைக் கடிதங்கள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்).
|
© AAT Sri Lanka. All rights reserved.
Solution by Affno